சூடான் இராணுவ அரசுடன் அதிகார பகிர்வு ஒப்பந்தம்

இரவு முழுவதும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் சூடானின் ஆளும் இராணுவ கெளன்சில் மற்றும் எதிர்த் தரப்பு தலைவர்களிடையே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

“சூடானின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்” என்று சூடானின் ஆளும் இராணுவ கெளன்சில் பிரதித் தலைவர் மொஹமட் மொஹமட் ஹம்தான் இந்த நிகழ்வை பற்றி குறிப்பிட்்டுள்ளார்.

சூடானின் நீண்ட கால தலைவர் ஒமர் அல் பஷீர் பதவி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

ஆட்சியை சிவில் அரசொன்றிடம் கையளிக்குமாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு இந்த வன்முறைகளில் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மாத ஆரம்பத்தில் ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இந்த ஆவணங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றதாக உறுதி செய்யப்பட்டது.

இதன்படி மூன்று ஆண்டுகளில் சட்டபூர்வ கவுன்சிலுக்கு அதிகாரத்தை மாற்ற இந்த உடன்படிக்கை வழிவகுக்கிறது.

இதன்படி முதல் 21 மாதங்களுக்கு இராணுவம் ஆட்சியில் இருப்பதோடு அடுத்த 18 மாதங்கள் சிவில் அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நடைபெறும்.

அரசியலமைப்பு விவகாரம் தொடர்பான இரண்டாவது உடன்படிக்கை வரும் வெள்ளிக்கிழமை உறுதிசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை