நடுக்கடலில் தத்தளித்த மீன்பிடி படகு கடற்படையால் மீட்பு

கிரிந்த மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடி ட்ரோலர் படகு இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், கடற்படையினரால் கரைக்கு இழுத்துவரப்பட்டுள்ளது. கரையிலிருந்து 24 கடல்மைல் தூரத்தில் இந்தப் படகு காப்பாற்றப்பட்டுள்ளது.

தென்பகுதி கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் கீழுள்ள சாகர கப்பல் இந்தப் படகிலிருந்தவர்களைக் காப்பாற்றியதுடன், இயந்திரக் கோளாறுடன் தத்தளித்த படகை கரைக்கு இழுத்து வந்தது. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை 5.40 இற்கு இடம்பெற்றுள்ளது.

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஷானு என்ற பெயரையுடைய ட்ரோலர் படகின் இயந்திரம் பழுதடைந்தமையால் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்துள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் மீனவப் படகுகளுக்கு கடற்படையினர் தொடர்ந்தும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை