ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பதவிக்கு முதல் பெண் தேர்வு

ஜெர்மனியின் உர்சுலா வொன் டெர் லியென், இரகசிய வாக்கெடுப்பு மூலம் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த 60 வயது லியென், ஸ்ட்ரோஸ்பேர்க்கை தளமாகக் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் 9 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் தற்போதைய ஐரோப்பிய ஆணைக்குழு தலைவராக இருக்கும் ஜீன் கிளவுட் ஜங்கருக்கு பதில் வரும் நவம்பர் 1ஆம் திகதி அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை வகுப்பது, சட்ட அமுலாக்கம் மற்றும் தேவை ஏற்படின் உறுப்பு நாடுகளுக்கு அபராதங்கள் விதிக்கும் அதிகாரங்களை இந்த ஆணைக்குழு பெற்றுள்ளது.

வாக்கெடுப்பு மூலம் முதல் பெண் ஆணைக்குழு தலைவராக தேர்வு செய்ப்பட்டிருக்கும் அவர், “என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஐரோப்பா மீது வைத்திருக்கும் நம்பிக்கையாகும்” என்று குறிப்பிட்டார்.

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை