வெற்றி பெரும் வேட்பாளர் ஒருவரையே ஐ. தே. முன்னணி களம் இறக்கும்

ஐ.தே.முன்னணி வெற்றி பெரும் வேட்பாளர் ஒருவரையே களம் இறக்கும் என நாம் திடசங்கற்பம் கொண்டுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உடகடடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கண்டி விவேகானந்தா தமிழ் மஹாவித்தியாலயத்தில் நேற்று (27) இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வேட்ப்பாளரை தெரிவு செய்யும் வகையில் பிரதமரும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவும் புரிந்துணர்வுடன் தேர்தல் பயணத்தை முன்னெடுத்துச் செல்வார்களாயின்  அவை சிறப்பாக இருப்பது மட்டுமன்றி, நிச்சயமாக வெற்றி பெரும் வாய்ப்புகளை கூட மிக எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

மாறாக மோதல்களுக்கு முகம் கொடுக்க நேரிடடால் வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கும் அதானால் பிரிவினைகள் உருவாகி, பல விமர்சனங்களுக்கும்  வித்தாக அது மாறிவிடும். ஆகவே அனைவரும் ஒற்றுமையை இலக்காக கொண்டு, ஒன்றிணைந்து செயற்படக்கூடிய ஒரு நிலைமையை கட்சிக்குள் தக்கவைத்துகொள்வது காலத்தின் கடடாயத்தேவையாக இருப்பதாக கடசியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் சொல்லிவைக்க விரும்புகின்றேன் அமைச்சர் சுட்டிக்குக்காட்டினார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச உண்மையில் சிறந்த வேட்ப்பாளர். கடசிக்குள் அவர் வேண்டும் இவர் வேண்டுமென எம்மால் சொல்லமுடியாது. ஐ.தே. கட்சி ஒரு பலத்த கட்சியாக இருக்கின்றன. ஆகவே அவர்களின் பாராளுமன்றக்குழுவின் கட்சியின் தீர்மானத்துக்கு நாம் இணக்கம் தெரிவிப்போம். 

மேலும் இதுவரை வேறெந்த கடசிகளும் எங்களை அழைக்கவில்லை என தெரிவித்த அமைச்சர் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் இருக்கும் நாம் எவ்வாறு வேறுகடசிக்குள் செல்வது என ஊடகவியாளரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் தெரிவித்தார்.

(எம்.ஏ. அமீனுல்லா)

Sun, 07/28/2019 - 16:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை