ஆஸி. மாணவனை விடுதலை செய்தது வடகொரியா

வட கொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய மாணவர் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக நலமுடன் இருப்பதாக அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது மாணவர் அலெக் சிக்லி வட கொரியாவின் கிம் இல் சங் பல்கலைக்கழகத்தில் கொரிய இலக்கியம் பயின்றவர். வட கொரியவுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனத்தையும் அவர் நடத்தி வந்தார். பியோங்யாங்கில் இருந்த அலெக் சிக்லி ஒரு வாரத்துக்குமுன் காணாமல் போனார்.

அவரை மீட்பதற்காக சுவீடனின் உதவியை நாடியது அவுஸ்திரேலியா. அதைத் தொடர்ந்து அலெக் சிக்லி வட கொரியாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேறி விட்டதைத் மோரிசன் உறுதிப்படுத்தினார். மாணவரின் விடுதலைக்கு உதவி செய்த சுவீடனுக்கு அவர் நன்றி கூறினார்.

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை