'எழுச்சிபெறும் கிராமிய குளங்கள்' திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

விவசாயப் பொருளாதாரத்தை வளப்படுத்துவதே நோக்கம் 

ஏழு மாவட்ட மக்களின் விவசாய பொருளாதாரத்தை வளப்படுத்தும் எழுச்சிபெறும் கிராமிய குளங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை துரிதப்படுத்தி  இன்னும் சில மாதங்களில் அதன் நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். 

ஜனாதிபதியின் எண்ணக்கருவான ‘எழுச்சிபெறும் கிராமிய குளங்கள்’ திட்டம் பசுமை காலநிலை நிதியத்தின் 3,682மில்லியன் ரூபா மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 1,250மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

2015நவம்பர் மாதம் பிரான்ஸின் பரிஸ் நகரில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான உடன்படிக்கையை தொடர்ந்து அவ் உடன்படிக்கையின் அடிப்படை நோக்கமான காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கான நிதி வசதிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கையின் விளைவாக இத்திட்டத்திற்கு பசுமை காலநிலை நிதியத்தின் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 

இத்திட்டம் பொலன்னறுவை, குருணாகல், வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார் ஆகிய 07மாவட்டங்களையும் மல்வத்து ஓயா, மீ ஓயா, யான் ஓயா ஆகிய 03கங்கைகளை அண்மித்ததாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.  

16 எல்லங்கா முறைமைகளின் 325கிராமிய குளங்கள் மற்றும் 75சுற்றாடல் முறைமைகளை அமைப்பதை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Fri, 07/12/2019 - 08:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை