சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நுவான் குலசேகர ஓய்வு

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த நுவான் குலசேகர சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் நுவான் குலசேகர. 2014-ம் ஆண்டு இலங்கை அணி ரி 20 உலகக் கிண்ணத்தை வெல்லும்போது அந்த அணியில் இருந்தவர். மேலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் முதனிலை பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தவர். இவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

37 வயதாகும் இவர் 2003-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தற்போது வரை 21 டெஸ்ட், 184 ஒருநாள் மற்றும் 58 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 48 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 1999 விக்கெட்டும், ரி20 -யில் 66 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

Fri, 07/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை