முதலாவது கறுப்பின விண்வெளி வீரராவதற்கு இருந்தவர் மரணம்

விண்வெளிக்கு செல்லும் முதல் கறுப்பின ஆபிரிக்கராக பதிவாவதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்த தென்னாபிரிக்க நாட்டவர் ஒருவர் தனது கனவு நிறைவேறும் முன்னர் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

30 வயதான மண்ட்லா மாசெகோ என்ற அந்த ஆடவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக அவரது குடுப்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

தென்னாபிரிக்க விமானப்படை உறுப்பினரான அவர் 2013 இல் ஒரு மில்லியன் பேரை தோற்கடித்து அமெரிக்க விண்வெளி அகடமியில் இடம்பிடித்த 23 பேரில் ஒருவரானார்.

யார் வேண்டுமானாலும் சாதனை படைக்கலாம் என்று ஆபிரிக்க இளைஞர்களுக்கு உணர்த்த விரும்பியதாக மசெக்கோ பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

வாகனங்களைப் பழுதுபார்ப்பவருக்கும் துப்புரவுப் பணியாளருக்கும் பிறந்த மண்ட்லா, துடிப்பும் உத்வேகமும் நிறைந்தவர் என்று கூறப்படுகிறது. புளோரிடாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் ஒரு வாரம் தங்கி அவர் பயிற்சி பெற்றார்.

இணையவாசிகள் சமூகத்தளங்களில் அவரது மரணம் குறித்து தங்களது இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை