குருநாகல் நீதிமன்றில் டொக்டர் சாபி ஆஜர்

25ஆம் திகதி வரை விளக்கமறியல்

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த குருணாகல் போதனா வைத்தியசாலை மகப் பேற்று மருத்துவர் டொக்டர் சாபி சஹாப்தீனை இம்மாதம் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு குருநாகல் நீதிவான் நீதிமன்ற நீதிபதி சம்பத் ஹேவா சவம் நேற்று உத்தரவிட்டார்.

கடந்த மே மாதம் 24ம் திகதி குருநாகல் பொலிஸாரால் டொக்ர் சாபி சஹாப்தீன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 6(1) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு 72 மணிநேரத்தின் பின்னர் அவர் சி. ஐ. டி பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பயங்காரவாத தடைச் சட்டத்தின் 9(1) கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு செயலாளரின் அனுமதி பெறப்பட்டிருந்தது.

வைத்தியர் செய்கு சாபிக்கு சஹாப்தீன் மேற்கொண்ட  சிசேரியன் மகப்பேற்று சிகிச்சையின் போது பெண்களுக்கான கருத்தடை மற்றும் சொத்துக் குவிப்பு மேற்கொண்ட வழக்கு குருநாகல் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் ஹோவா வசம் முன்னிலையில் விசாரணைக்காக முன்னெடுக்கப்பட்டபோதே இம்மாதம் 25 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் தொடர்பான குருநாகல் நகரில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பலத்த பாதுகாப்புக் கடைமையில் ஈடுபட்டு இருந்தனர். வைத்தியர் சாபியை பார்ப்பதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நீதி மன்ற சுற்று வட்டாரத்தில் இருந்தனர். இதற்கும் மேலதிகமாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்கள் நீதிமன்றத்தின் வாசலில் நிற்பதைக் காணக் கூடியதாக இருந்தது.

வடமேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்ட பல பிக்குமார்கள் இந்த வழக்கை பார்வையிட வருகை தந்திருந்தனர்.

பயங்கவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துக்கப்பட்டுள்ள வைத்தியர் சாபி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைத்து வரப்பட்டிருந்தார். அவர் மு. ப 10.30 மணி அளவில் நீதிவான் முன்நிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் காரணங்களை தெளிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட வருகை தராமையின் காரணமாக வழக்கு விசாரணை ஒரு மணி நேரமளவில் ஒத்திவைக்கப்பட்டு ஆரம்பமானது.

வைத்தியர் சாபி சார்பில் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் உட்பட 7 பேர் வாதாடியதுடன் எதிராக 20 பேர் கொண்ட குழுவினர் வாதாடினர். அவருக்கு எதரான போதிய ஆதாரங்கள் இல்லையெனினும் சொத்துக் குவிப்பு மற்றும் கருத்தடை தொடர்பாக கொழும்பில் மருத்துவ பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் போன்ற காரணங்களுக்காகவும் வைத்தியர் சாபியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு முன்னாள் வைத்தியர் சாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை காலை நீதிபதி சம்பத் ஹேவா வசம் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. நேற்று டொக்டர் சாபி சஹாப்தீன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். காலையில் இடம்பெற்ற விசாரணையின்போது இடையிடையே நீதிமன்றத்தில் மின்சாரம் தடைபட்டதன் காரணமாக விசாரணை பி. ப 2.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பி.ப 2.00 மணிக்கு நீதிமன்றம் கூடியபோது சி. ஐ. டியின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் டொக்டர் சாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. எனினும் சாபி சஹாப்தீனின் சொத்துக்கள் தொடர்பில் பூரணமாக தெளிவுபடுத்த சி. ஐ. டி தரப்பினர் தவறியுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அவருடன் கொடுக்கல் வாங்களில் தொடர்புபட்டிருந்த தரகர் ஒருவருக்கு இடைப்பட்ட காலத்தில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் இத்தகைய நிலையில் டொக்டர் சாபி விடுவிக்கப்பட்டால் மேலும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் நீதிமன்றம் கருதுவதாக நீதிபதி தெரிவித்தார்.

இவற்றைக் கவனத்திற்கொண்டு டொக்டர் சாபி சஹாப்தீனை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தடுத்து வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தார்.

எம். ஏ. நிலாம், வாரியபொல மாவத்தகம நிருபர்கள்

Fri, 07/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை