காத்தான்குடியில் சிற்றி பொல வாராந்த சந்தை திறந்து வைப்பு

காத்தான்குடியில் சிற்றிப் பொல எனும் வாராந்த நகரச் சந்தையொன்று (20) சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் இடம் பெறும் இந்த நகரச் சந்தையினை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், நகர சபையின் செயலாளர் திருமதி றிப்கா ஷபீன் உட்பட நகர சபை உறுப்பினர்கள் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியையொட்டி ​ெடாக்டர் அகமட் பரீட் மாவத்தையில் இந்த வாராந்த சந்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6மணிவரை இச்சந்தை நடைபெறவுள்ளது.

இன ஐக்கியத்தையும் இன நல்லிணக்கத்தையும் கருத்திற் கொண்டு இச் சந்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த வியாபாரிகள் தமது வியாபாரங்களை மேற் கொள்வதுடன் காத்தான்குடியின் உற்பத்திப் பொருட்களும் இச் சந்தையில் வியாபாரம் செய்யப்படும்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

 

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை