உலக செல்வந்தர்களின் பட்டியலில் கேட்ஸ் சரிவு

மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உலகின் பெரும் செல்வந்தர் பட்டியில் 2 ஆவது இடத்தில் இருந்து பின்தள்ளப்பட்டுள்ளார். பிரான்ஸ் செல்வந்தர் பெர்னாட் ஆர்னோல்ட் அந்த இடத்தை பிடித்துள்ளார்.

ஆடம்பர பொருட்களை உற்பத்தி செய்யும் எல்.வி.எம்.எச் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆர்னோல்ட் பிளும்பேர்க் செல்வந்தர்ப் பட்டியலில் பில் கேட்ஸை பின்தள்ளனார். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்ட பின் கேட்ஸ் முதல் இரு இடங்களில் இருந்து பின்தள்ளப்படுவது இது முதல் முறையாகும்.

அர்னோல்டின் சொத்துகளின் நிகர மதிப்பு 108 பில்லியன் டொலர்கள் என அந்தப் பட்டியல் காட்டுகிறது. கடந்த ஓர் ஆண்டில் அவர் தனது சொத்து மதிப்பில் 39 பில்லியன் டொலர்களை அதிகரித்துள்ளார். கேட்ஸின் சொத்து மதிப்பு 107 பில்லியன் டொலர்களாகும். அமசோன் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெசோன் 125 பில்லியன் டொலர் நிகர மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை