செரீனாவை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார் சிமோனா ஹலேப்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ருமேனியாவின் சிமோனா ஹலேப்.

இதனால் 24ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை செரீனா இழந்தார்.

லண்டனில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் இறுதி ஆட்டத்தில் 23 முறை சாம்பியன் செரீனாவும், முன்னாள் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹலேப்பும் மோதினர்.

ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பம் முதலே சிமோனா ஆதிக்கம் செலுத்தினார். அவரது தாக்குதல் ஆட்டத்திற்கு பதில் கூற முடியாமல் தடுமாறிய செரீனா, இறுதியில் 6–2, 6–2 என நேர் செட்களில் வீழ்ந்தார். 56 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. செரீனா 26 தவறுகளையும், சிமோனா 2 தவறுகளையும் புரிந்தனர்.

இதில் மார்க்ரெட் கோர்ட் நிகழ்த்திய 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை சமன் செய்யும் செரீனாவின் கனவு கலைந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை