பெற்றோல், டீசலின் விலைகள் குறைப்பு

உலக சந்தையில் மசகு எண்ணை விலை குறைந்துள்ளதால் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம், ஒக்ேடன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. விலைக் குறைப்புக்கு முன்னர் ஒக்ேடன் 92 ரக பெற்றோல் 138 ரூபாவாக காணப்பட்டது. விலை குறைந்ததையடுத்து 136 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒக்ேடன் 95 ரக பெற்றோல் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், 164 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்ேடன் 95 ரக பெற்றோல்

நேற்று நள்ளிரவு முதல் 159 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுப்பர் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 131 ரூபாவுக்கு (பழைய விலை - 136 ரூபா) விற்பனை செய்யப்படுகிறது. ஒடோ டீசலில் எவ்வித விலை மாற்றங்களும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணையின் விலை 74 டொலர்களிலிருந்து 64 டொலர்களாக குறைந்ததையடுத்தே இதன் விலைகள் குறைக்கப்பட்டன.

Thu, 07/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக