இளம் ஆர்வமுள்ள தலைவர்களுக்கான மாநாடு; ஆசிய பிராந்திய சர்வதேச தூதர் பதவி இலங்கைக்கு

இளம் ஆர்வமுள்ள தலைவர்களுக்கான மாநாடு கடந்த ஜூன் மாதம் 24ம் திகதி தொடக்கம் ஜூலை 1ம் திகதிவரை இங்கிலாந்து லீட்ஸ் நகரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் இலங்கை சார்பாக ஸ்மார்ட் சிறிலங்கா திட்டத்தின் கருத்திட்ட உத்தியோகத்தர் சிரியான் டி சில்வா கலந்து கொண்டார்.நிலையான அபிவிருத்தி இலக்குகளை செயற்படுத்தும் நாடுகளில் இளைஞர்கள் சார்பாக இலங்கையில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிறிலங்கா வேலைத்திட்டம் பெரிதும் வரவேற்கப்பட்டதுடன் இத்திட்டம் குறித்த முழுமையான விளக்கங்களை வழங்குமாறு கோரப்பட்டதற்கிணங்க சிரியான் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்டதுடன் இத்திட்டத்தை ஏனைய நாடுகளும் செயல்படுத்துமாறு முன்மொழியப்பட்டமை விசேட அம்சமாகும். இவ்வமைப்பின் ஆசிய பிராந்தியத்திற்கான சர்வதேச தூதர் நியமனமும் இதன்போது சிரியான் டி சில்வாவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஸ்மார்ட் சிறிலங்கா வேலைத்திட்டம் பணிப்பாளர் நாயகம் எரிக் வீரவர்தன மற்றும் பணிப்பாளர் அஜித் ஜயவர்தன ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 25 மாவட்டங்களிலும் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் நோக்கில் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை