உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் நியூசிலாந்து வீரர் போல்ட்

உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹெட்ரிக்’ சாதனை படைத்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் 10 ஓவர் வீசி 51 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஒட்டுமொத்த உலகக் கிண்ண வரலாற்றில் டிரென்ட் போல்டையும் சேர்த்து 11 ஹெட்ரிக் விக்கெட் சாதனை பதிவாகியுள்ளது.

கடைசி ஓவரில் போல்ட் அடுத்தடுத்து 3 விக்கெட் கைப்பற்றி ‘ஹெட்ரிக்’ சாதனை படைத்தார். 3-வது பந்தில் உஸ்மான் கவாஜா, 4- வது பந்தில் மிட்செல் ஸ்டார்க், 5-வது பந்தில் பெஹ்ரண்டாப் ஆகியோரையும் அவர் ‘ஆட்டமிழக்க ’ செய்தார். இதன் மூலம் உலகக் கிண்ண போட்டியில் ‘ஹெட்ரிக்’ சாதனை படைத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை டிரென்ட் போல்ட் பெற்றார்.

உலகக் கிண்ணத்தில் 11-வது ‘ஹெட்ரிக்’ நிகழ்வாகும். உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் சாதனை படைத்த வீரர்கள் வருமாறு:-

சேத்தன் சர்மா (இந்தியா)- நியூசிலாந்து- 1987

சக்லைன் முஸ்தாக் (பாகிஸ்தான்) சிம்பாப்வே 1999

சமிந்தா வாஸ் (இலங்கை) பங்களாதேஷ் 2003

பிரெட் லீ (அவுஸ்திரேலியா) தென்ஆபிரிக்கா 2003

மலிங்க (இலங்கை) தென்ஆபிரிக்கா 2007

கேமர் ரோச் (மேற்கிந்திய தீவு) நெதர்லாந்து 2011

மலிங்க (இலங்கை) கென்யா 2011

ஸ்டீவ்பின் (இங்கிலாந்து) அவுஸ்திரேலியா 2015

டுமினி (தென்ஆபிரிக்கா) இலங்கை 2015

முகமது ஷமி (இந்தியா) ஆப்கானிஸ்தான் 2019

டிரெண்ட் போல்ட்(நியூசிலாந்து) அவுஸ்திரேலியா 2019

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை