'பீ' அறிக்ைகக்கும் பொலிஸ் தகவல்களுக்கும் வேறுபாடுகள்

சர்ச்சைக்குரிய மகப்பேற்று வைத்தியர் ஷாபி தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பீ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கும், குற்றப் புலனாய்வுப் பிரிவில் பொலிஸார் வழங்கிய தகவல்களுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுவதாக தெரியவருகிறது.

குருநாகல் பொலிஸ் அதிகாரிகளான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத், பொலிஸ் பரிசோதகர் மஹிந்த திஸ்ஸாநாயக்க, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பலால் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், குறித்த வைத்தியர் கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக தகவல் கிடைத்திருந்ததாகக் கூறியிருந்தனர். சிங்கள  பத்திரிகை அது பற்றி செய்தி வெளியிட்ட பின்னர் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இருந்தபோதும் நீதிமன்றத்தில் மே 22ஆம் திகதி பொலிஸார் பீ அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இது சிங்களப் பத்திரிகை செய்தி வெ ளியிடுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாகும். இது தற்பொழுது குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஏ4 தாள் ஒன்றில் தட்டச்சு செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்ட வைத்தியர் ஒருவர் சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை செய்தமை தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் அதில் டொக்டர் ஷாபியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

குறித்த டொக்டர் அண்மையில் கொள்வனவு செய்த சொத்து தொடர்பிலும் பீ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருந்தபோதும் பீ அறிக்கையில் உள்ள விடயங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்த எந்தவொரு பொலிஸாரும் கூறவில்லை.

டொக்டர் ஷாபியை கைதுசெய்வதற்கான வழக்கை சோடிக்கும் நோக்கிலேயே பொலிஸார் இந்தக் குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்தியுள்ளனர் என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

 

 

Mon, 07/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை