விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போயிங் நிதியுதவி

வெவ்வேறு விமான விபத்துகளில் உயிரிழந்த 346 பயணிகளின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக போயிங் விமான நிறுவனம் 100 மில்லியன் டொலர் நிதி உதவி அளித்துள்ளது. இந்தோனேசியாவிலும் எத்தியோப்பியாவிலும் நடைபெற்ற இந்த ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் விபத்துக்குள்ளானதில் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இது குறித்து சிகாகோவில் உள்ள போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயர் துடைக்க மிகுந்த மனவருத்தத்துடன் இரங்கல் தெரிவிப்பதுடன் இந்த நிதியை ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடானது, உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்வி மற்றும் ஏனைய செலவுகளுக்காக வழங்கப்படும் என, போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்களால் இழப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு விமான விபத்துகளைத் தொடர்ந்து 737 மெக்ஸ் ரக விமான சேவை, உலகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் போயிங் விமான நிறுவனம் இழப்பீடு வழங்கக் கோரி பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை