மூதூர் ஹீரோ அணி வெற்றி

மூதூர் உதைப்பந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட மூதூர் லீக் வென்டேச் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஈராக் அணியை எதிர்த்தாடிய மூதூர் ஹீரோ அணி வெற்றி பெற்று சம்பியனானது.இப்போட்டி வெள்ளிக்கிழமை (12) மாலை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரண்டு அணிகளாலும் கோல் புகுத்த முடியாமல் போக இரண்டு அணிகளுக்கும் தலா 05 பெனால்டி உதைகள் வழங்கப்பட்டன.

இதன்போது ஹீரோ அணி 05:04 என்ற அடிப்படையில் பெனால்டி உதைகள் மூலம் வெற்றி பெற்று சம்பியனானது.இறுதிப் போட்டியின் சிறப்பு வீரருக்கான கிண்ணம் ஹீரோ அணியின் கோல் காப்பாளர் எம்.வஸீம் வசமானது.இப் போட்டித் தொடரில் மூதூரில் உள்ள 11 அணிகள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் இறுதிப் போட்டியில் அதிதிகளாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுரடி சில்வா, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.அரூஸ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர், மூதூர் உதைப்பந்தாட்ட லீக் தலைவர் எம்.றிஸான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை