கனடா ஹோட்டலில் நச்சு வாயுக் கசிவு

கனடாவில் ஹோட்டல் ஒன்றில் நச்சு வாயு கசிந்த விபத்தில் 46 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் வின்னிபெக் நகரில் உள்ள ‘சுப்பர் 8’ ஹோட்டலில் கார்பன்மோனாக்சைட் என்ற நச்சு வாயு கசிந்து அதிகளவு காற்றில் கலந்தது. இதில் பலர் மூச்சு திணறியதை அடுத்து உடனடியாக அவர்கள் வெளியேற்றப்பட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஹோட்டலுக்கான நச்சு வாயு விநியோகமும் நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் மூச்சு திணறல் மற்றும் மயங்கி சரிந்த 46 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Thu, 07/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை