திருக்குறள் வாரம் ஜனாதிபதியால் பிரகடனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் ஆவணி (ஓகஸ்ட்) முதல் வாரம் திருக்குறள் வாரமாக பிரகடனப் படுத்தப்படவுள்ளது.

உலக பொதுமறையான திருக்குறளுக்கு ஓர் உயரிய இடத்தினை வழங்கி அதன் பெருமையினை இலங்கையர் அனைவரும் அறிய வைக்கின்ற முயற்சியின் பிரகாரமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், இவ்வாறு ஆவணி முதல்வாரம் திருக்குறள் வாரமாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை வரலாற்றில் எந்தவொரு தலைவரும் எடுக்காத முயற்சியையே ஜனாதிபதி எடுக்கவுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு சமயங்களுக்குப் பொதுவான அறநெறிகளைத் திருக்குறள் வலியுறுத்துவதன் பிரகாரம்தான் இந்த முயற்சியை ஜனாதிபதி எடுத்துள்ளார். தென்னிந்தியாவிலிருந்து முக்கிய அதிதிகளும் திருக்குறள் வார நிகழ்வுகளுக்காக அழைக்கப்படவுள்ளனர்.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு உட்பட பல இடங்களில் இதற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இசை கச்சேரிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், திருகோணமலையிலும் சில நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sun, 07/07/2019 - 15:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை