கொங்கோவில் உயிர்கொல்லி ‘எபோலா’ தொற்றியது உறுதி

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கொங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு நகரான கோமாலில் முதலாவது எபோலா தோற்று பதிவாகியுள்ளது.

மத்திய கோமாவில் கிறிஸ்தவ போதகர் ஒருவருக்கு வைரஸ் தொற்றி இருப்பதாக சுகாதார அமைச்சு ஊறுதி செய்துள்ளது. எனினும் அந்த நோய் பரவும் ஆபத்து குறைவாக இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஓர் ஆண்டுக்கு முன்னர் கொங்கோவில் எபோலா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து 1,600க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் போதகர் அந்த வைரஸுடன் பஸ் வண்டியில் 200 கி.மீ பயணித்துள்ளார். இந்நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு அந்த பஸ் வண்டியில் பயணித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஓட்டுநர் உட்பட 18 பயணிகளுக்கு நேற்று தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2014–16 காலப்பகுதியில் எபோலா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியபோது 28,616 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகினர். கினியா, லைபீரிய மற்றும் சியர்ராலியோன் ஆகிய நாடுகளில் சுமார் 11,310 பேர் உயிரிழந்தனர்.

Tue, 07/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை