ஜனாதிபதி வேட்பாளரை கட்சியே தீர்மானிக்கும்

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான எவ்வித தீர்மானத்தையும், தமது கட்சி மேற்கொள்ளவில்லை என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஐ.தே.கட்சி செயற்குழு அது தொடர்பில் கூடித் தீர்மானம் எடுக்கும் எனத் தெரிவித்த அமைச்சர், மக்கள் எதிர்பார்ப்பை முன்னிறுத்தி வெற்றி பெறக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கே கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்

பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் தமது கேள்வியின்போது அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்போவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளாரே, அதில் எந்தளவு உண்மை உள்ளது? கட்சி அவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், அது அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்தாகும். கட்சி மட்டத்தில் ஆராய்ந்து ஐ. தே. கட்சி அதற்கான தீர்மானத்தை எடுக்கும். எவ்வாறெனினும் வெற்றிபெறக்கூடிய ஒருவரையே கட்சி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 07/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை