இலங்கை கபடி சம்மேளனத்தின் உப தலைவராக அனஸ் அஹமட்

இலங்கை கபடி சம்மேளனத்தின் உப தலைவராக, அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 15 ம் திகதி இலங்கை கபடி சம்மேளனத்தின் பொதுச்சபை கூட்டம் விளையாட்டு துறை அமைச்சின் டங்கன் வைட் அரங்கில் இடம்பெற்றது. இதில் இலங்கை கபடி சம்மேளனத்திற்குரிய புதிய நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

46 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த தெரிவில் அனஸ் அஹமட் 33 வாக்குகளைப் பெற்று இலங்கை வரலாற்றில் முதலாவது முஸ்லிம் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாப செயலாளரான இவர், பல்வேறு சமூக அமைப்புக்கள் மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி சம்பந்தமான பல அமைப்புக்களில் அங்கத்துவம் வகிப்பதுடன் தனது திறமையின் மூலமாக வீரர்களை கபடி விளையாட்டின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரகாசிக்கச் செய்ததுடன் அவர்கள் இத்துறையில் முன்னேறி அரச உத்தியோகத்தர்களாக கடமைபுரியவும் பல்வேறு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

(நிந்தவூர் குறூப் நிருபர் )

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை