கவனிப்பாரற்றுக் கிடக்கும் நெசவுப்பயிற்சி நிலையம்

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னமுகத்துவாரம் நெசவு பயிற்சி நிலையம், கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக சமூக சமூக,ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று 09 ஆம் குறிச்சி சின்ன முகாத்து வாரம் 11 ஆம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள இந்தக் கட்டடம் சுனாமிஏற்பட்டதிலிருந்து இயங்காதுள்ளது. இதானல் சாதாரண தர, உயர்தரப் பரீட்சையெழுதிய மாணவர்கள், இளைஞர் யுவதிகள் நெசவுப் பயிற்சியைப் பெற முடியாதுள்ளனர். மேலும் இப்பயிற்சி நெறியைப் பெற, தூர இடங்களுக்குச் செல்ல நேர்ந்துள்ளது. சரியான பொழுது போக்குகள், பயிற்சி நெறிகள் இல்லாதமை இளவயதுத் திருமணங்களுக்கும் வழியேற்படுத்து கிறது. கதவுகள், ஜன்னல்கள் இன்றி டெங்கு நுளம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் பெருகும் இடமாக இக்கட்டடம் காணப்படுவதுடன் இரவு வேளைகளில் சமூக விரோத செயற்பாடுகளும் இங்கு இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மண்டூர் குறூப் நிருபர்

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை