புதிய இரட்டைத் தட்டு பஸ் சேவை மீண்டும் அறிமுகம்

1952 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரிடிஷ் லேலண்ட் வகையான இரட்டை தட்டு பஸ்ஸொன்று மீளுருவாக்கப்பட்டு மக்கள் போக்குவரத்துக்காக மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. கிராமத்துக்கு மதிப்பான மக்கள் போக்குவரத்து சேவை மற்றும் கண்காட்சியின் போது சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது. இதன் போதே இரட்டை தட்டு பஸ் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைக்கப்பட்டது. இது தவிர அமல் பியதிலக்க என்பவரால் உருவாக்கப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பான வீல் மாஸ்டர் புதிய மேம்படுத்தப்பட்ட கை டிரக்டரும் மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. நிட்டம்புவ சங்கபோதி மத்திய மகா வித்தியாலயத்தில் இந்தக் நடைபெற்றது.

போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான இலங்கை ரயில் சேவைகள், இலங்கை போக்குவரத்துச் சபை, மோட்டார் வண்டி போக்குவரத்து திணைக்களம் சிவில் விமான சேவைகள் அதிகார சபை, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம், தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம், வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, லக்திவ பொறியிலாளர் நிறுவனம் போன்றவையும் கண்காட்சியில் இணைந்திருந்தன.

இங்கு உரையாற்றிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பொது மக்கள் அரச நிறுவனங்களுக்கு செல்வதை தவிர்த்து அரச நிறுவனங்கள் பொது மக்களிடம் செல்லும் காலத்தை உருவாக்க வேண்டுமென கூறினார்.

 

Tue, 07/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை