கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை சாதனை

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடைப்பட்ட செஸ் சுற்றுப்போட்டியில் 17 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகள் இரண்டிலும் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை சம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

இப்போட்டியானது 26.06.2019 ஆரம்பித்து இரண்டு நாட்கள் போட்டிகளாக திருகோணமலை சென் மேரிஸ் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவனுமான எ.எம்.ஸாக்கீர் மாணவர்களை பயிற்றுவித்ததுடன் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் விளையாட்டு பாட ஆசிரியர்களான எ.எம்.அப்ராஜ் ரிலா, ஆசிரியர் அலியார் பைசர், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான எம்.ஏ.எம்.றிஜால், எஸ்.எல்.எம்.சுஹீதான் ஆகியோர் வழிநடத்தினர்.

கல்லூரியின் அதிபர் எ.வி.முஜீன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் இம்மாணவர்களை வெற்றிபாதைக்கு கொண்டுசென்ற ஆசிரியர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்த வெற்றியானது கல்முனை ஸாஹிறா தேசியப்பாடசாலை வரலாற்றில் மிக முக்கியதுவம்வாய்ந்ததாக கருதப்படுவதுடன் செஸ் சுற்றுப்போட்டி தொடர்களில் 17 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகள் இரண்டிலும் முதல் தடவையாக வெற்றிபெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் தேசியமட்டபோட்டியிலும் பங்குகொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுள்ள குறிப்பிடத்தக்கது.

(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை