கிரிஸ் கெய்லுக்கு ஏமாற்றமாக முடிந்த உலகக் கிண்ணம்

உலகக் கிண்ணத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கருதப்பட்ட கிறிஸ் கெய்லுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

உலகக் கிண்ண தொடருக்கு முன் மேற்கிந்திய தீவு இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் கிறிஸ் கெய்ல் ருத்ர தாண்டவம் ஆடினார்.

முதல் போட்டியில் 129 பந்தில் 135 ஓட்டங்கள் குவித்தார். 2-வது போட்டியில் 63 பந்தில் 50 ஓட்டங்கள் சேர்த்தார். 3-வது போட்டி கைவிடப்பட்டது. 4-வது போட்டியில் 97 பந்தில் 14 சிக்ஸ், 11 பவுண்டரியுடன் 162 ஓட்டங்கள் குவித்தார்.

ஐந்தாவது போட்டியில் 27 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்சருடன் 77 ஓட்டங்கள் குவித்தார். இவரது ஆட்டத்தில் 113 இலக்கை மேற்கிந்தியதீவு 12.1 ஓவரிலேயே எட்டியது.

நான்கு போட்டிகளில் 424 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதனால் துடுப்பாட்டம் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ள இங்கிலாந்தில் உலகக் கிண்ணம் நடைபெற்றதால் கிறிஸ் கெய்ல் ருத்ரதாண்டவம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இங்கிலாந்து தொடரின் பார்ம் உலகக் கிண்ண தொடரிலும் நீடிக்கும். இதனால் உச்சக்கட்ட புகழோடு ஓய்வு பெற்று விடலாம் என்று நினைத்த கெய்ல், ‘‘உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்தான் என்னுடைய கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும்’’ என்றார்.

ஆனால் 9 போட்டிகள் கொண்ட லீக் அடிப்படையில் இடம்பெற்ற கிறிஸ் கெய்லால் மிகப்பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. 9 போட்டிகளில் 242 ஓட்டங்களே சேர்த்தார். சராசரி 30.25 ஆகும். இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தனது ஓய்வு முடிவை தள்ளிப்போட்டுள்ளார்.

Sat, 07/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை