அரையிறுதியில் தோனியை தாமதமாக களமிறக்கியவர் பெயர் வெளியானது

உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் நட்சத்திர வீரர் தோனியை தாமதமாக இறக்கியதற்கு யார் காரணம் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

மன்செஸ்டரில் நடந்த நியுசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து, உலகக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது. அரையிறுதியில் தோனி ஏன் 7ஆவது வீரராக இறக்கப்பட்டார் என்ற சர்ச்சை வெடித்தது. நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மளமளவென சரிந்தனர்.

இதனையடுத்து, 5ஆவது வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் சிறிது நேரத்தில் வெளியேறினார். 6ஆவது வீரராக பாண்டியா இறங்கினார். டோனி 7ஆவது வீரராக களமிறக்கப்பட்டார். தோனி மட்டும் 5ஆவது வீரராக இறங்கி இருந்தால், விக்கெட்டுகள் வீழ்வதை நிறுத்தி ஆட்டத்தையே மாற்றி இருப்பார் என்ற கருத்து ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களின் மத்தியிலும் உள்ளது.

தோனியை 7ஆவது இறக்க யார் காரணம் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. இந்தியாவின் துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தான் தோனியை 7 ஆவது இடத்திற்கு அனுப்ப முடிவு செய்ததாக டி.என்.ஏ செய்தி நிறுவனம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்திய அணியின் நிர்வாகிகள் குழு, அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் இந்தியாவின் உலகக் கிண்ண செயல்திறனை மதிப்பாய்வு செய்ய உள்ளது. அப்போது, தோனியை அந்த நிலையில் அனுப்புவதற்கான காரணம் கேட்கப்படலாம். அதற்கு அவர்கள் அளிக்கும் காரணம் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை