நாஜிக்கள் திருடிய ஓவியத்தை திரும்பக் கொடுக்கிறது ஜெர்மனி

இத்தாலி நகரான பிளோரன்ஸில் உள்ள ஊப்பிசி காட்சிக் கூடத்தில் இருந்து 1943 ஆம் ஆண்டு நாஜிப் படைகளால் திருடப்பட்ட ஓவியத்தை திருப்பிக் கொடுக்கவுள்ளதாக ஜெர்மனி குறிப்பிட்டுள்ளது.

மலர் கூட்டங்களை சித்தரிக்கும் பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான அந்த ஓவியம் ஜெர்மனி குடும்பம் ஒன்றின் வசமுள்ளது.

எனினும் இந்த ஓவியத்தை அருங்காட்சியத்திற்கு திருப்பித் தரும் தார்மீகப் பொறுப்பு ஜெர்மனிக்கு இருப்பதாக ஊப்பிசி காட்சிக் கூடத்தின் தலைவர் கடந்த கடந்த ஜனவரியில் வலியுறுத்தி இருந்தார்.

நெதர்லாந்தின் ஜபன் வான் ஹுய்சமினால் தீட்டப்பட்ட இந்த ஓவியம் 1824 ஆம் ஆண்டு போலரன்ஸில் முதல் முறை காட்சிக்கு வைக்கப்பட்டது.

எனினும் இரண்டாவது உலகப் போரியில் ஜெர்மனித் துருப்பும் வடக்கில் இருந்து பின்வாங்கிச் செல்லும்போது இந்த ஓவியத்தை திருடிச் சென்றது.

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை