சூடான் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இராணுவத்தினர் கடும் எச்சரிக்கை

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிட்டிருக்கும் நிலையில் எதிர்த்தரப்பு அலுவலகங்களை சுற்றிவளைத்திருக்கும் பாதுகாப்பு படையினர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் முடக்கியுள்ளனர்.

சூடானில் நீண்டகாலத் தலைவர் ஓமர் அல் பஷீர் பதவி கவிழ்க்கப்பட்ட பின் ஆட்சியை சிவில் நிர்வாகத்திற்கு வழங்குவதை இராணுவம் மறுத்துவரும் நிலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு எதிர்ப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஒடுக்குமுறை செயற்பாடுகளுக்கு சூடான் தொழில்முறையாளர்களின் சம்மேளனம் தனது ட்விட்டரில் கண்டனம் வெளியிட்டுள்ளது.

சூடான் எதிர்த்தரப்பினர் பேரணி குறித்து விளக்க கடந்த சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். ஜனநாய ஆதரவு ஆர்ப்பாட்ட முகாம் மீது கடந்த ஜுன் 3 ஆம் திகதி இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி பல டஜன் பேர் கொல்லப்பட்ட பின்னர் இடம்பெறும் முதல் ஆர்ப்பாட்டமாகவும் இது அமைவிருந்தது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு எதிர்த்தரப்பினர் பொறுப்பேற்க வேண்டும் என்று இராணுவம் எச்சரித்துள்ளது.

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை