90 சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க திட்டம்

76 திட்டங்களுக்கு கேள்விப் பத்திரம்

ஒரு மொகா வோட் வீதம் 90 சூரிய சக்தி மின் நிலையங்களை அமைப்பதற்கு கேள்விப்பத்திரங்கள் கோரப்படவிருப்பதாக மின்வலு, எரிசக்தி மற்றும் தொழிற்றுறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் கீழ் 76 திட்டங்களுக்கான கேள்விப்பத்திரங்களைக் கோருவதற்கான அனுமதி கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். துஷார இந்துனில் அமரசேன எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தியைப் பயன்படுத்தினால் நிலையான மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம்.ஐந்து மெகாவோட்ஸ் உற்பத்தியை மேற்கொள்தாயின் அனுமதி வழங்குவோம் என்றார்.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகுகளுக்கு ஒரே விலையை வழங்குவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுகின்றன. எனவே புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது உசிதமானதாக இருக்கும் என பேராசிரியர் ஆஷு மாரசிங்க குறிப்பிட்டார். இது தொடர்பில் 2015ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது பிரபலமான திட்டமாக முன்வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 

Sat, 07/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை