பொஸ்னிய யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட 86 பேர் நல்லடக்கம்

1990களின் பொஸ்னிய யுத்த ஆரம்பத்தில் பொஸ்னிய செர்பிய படைகளால் பிரிஜெடோரில் படுகொலை செய்யப்பட்ட 86 முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகள் நூற்றுக்கணக்கானோரின் பங்கேற்புடன் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

ஆண்கள் மற்றும் பெரும்பாலும் பதின்ம வயது இளைஞர்களைக் கொண்ட பாதிக்கப்பட்டவர்களின் எச்சங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய பொஸ்னியாவின் மலைப் பிராந்தியமான கொரிகன்ஸ்கே ஸ்டிஜெனில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு குன்றின் அடிப்பகுதியில் உள்ள இயற்கையான குழி ஒன்றில் அதிக எண்ணிக்கையான எலும்புகள் கண்டுபடிக்கப்பட்டன.

இதில் குறிப்பாக பொஸ்னிய முஸ்லிம்களைக் கொண்ட 200க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு தடுப்பு முகாம்களில் இருந்த குரோசிய கிறிஸ்தவ கைதிகளும் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

1992 ஓகஸ்ட் 21 ஆம் திகதி கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றின் கீழ் பஸ்ஸில் ஏற்றப்பட்ட இந்தக் கைதிகள் கொரிகன்ஸ்கே ஸ்டிஜெனுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்கள் மலை விளிம்பில் வரிசையாக நிறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக பெஸ்னிய செர்பிய படையினர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

சுமார் 100,000 உயிர்களை காவுகொண்ட 1992–1995 பொஸ்னிய யுத்தத்தின் பயங்கர நிகழ்வுகளில் ஒன்றாக இது உள்ளது.

Mon, 07/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை