உலக சம்பியன் இங்கிலாந்தை 85 ஓட்டங்களுக்கு சுருட்டிய அயர்லாந்து

அயர்லாந்துக்கு எதிரான லோர்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து 23.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 85 ஓட்டங்களில் சுருண்டு படுமோசமான நிகழ்வை சந்தித்துள்ளது.

இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

கத்துக்குட்டி அணியான அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் ஓட்டம் குவிக்கும் நோக்கத்தோடு களம் இறங்கினர். அவர்கள் நினைப்பை அடியோடு குழிதோண்டி புதைத்தனர் அயர்லாந்து பந்து வீச்சாளர்கள்.

ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராய் 5 ஓட்டங்களிலும், ரோரி பர்ன்ஸ் 6 ஓட்டஙகளிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

3-வது வீரராக களம் இறங்கிய டென்லி ஓரவிற்கு தாக்குப்பிடிக்க, ஜோ ரூட் (2), பேர்ஸ்டோவ் (0), மொயீன் அலி (0), கிறிஸ் வோக்ஸ் (0) அடுத்தடுத்து நடையை கட்டடினர். இதனால் இங்கிலாந்து 43 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

டென்லி 23 ஓட்டங்களும், சாம் குர்ரான் 18 ஓட்டங்களும், ஸ்டோன் 19 ஓட்டங்களும் அடிக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 23.4 ஓவரிலேயே 85 ஓட்டங்களில் சுருண்டது. மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்களை கடந்தனர். அயர்லாந்து அணி சார்பில் முர்டாக் 5 விக்கெட்டும், அடைர் 3 விக்கெட்டும், ரங்கின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Fri, 07/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை