உலகில் 821 மில்லியன் மக்கள் பசியால் வாட்டம்

கடந்த ஓராண்டு காலத்தில் 821 மில்லியன் பேர் பசியால் வாடியதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அது 10 மில்லியன் அதிகமாகும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பல்லாண்டுகளாகக் குறைந்து வந்த அந்த எண்ணிக்கை, 2015இல் அதிகரிக்க ஆரம்பித்தது. பருவநிலை மாற்றமும், புதிதாக மூண்ட போர்களும் அதற்கு முக்கியக் காரணமாகும்.

உலகில் சுமார் 149 மில்லியன் பிள்ளைகள் ஊட்டச் சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவித்தது.

அதேவேளையில், உலகின் பல பகுதிகளிலும் உடற்பருமனாலும், கூடுதல் எடையாலும் எல்லா வயதுப் பிரிவினரும் பாதிக்கப்பட்டு வருவதாக அறிக்கை குறிப்பிட்டது.

2030ஆம் ஆண்டுக்குள் யாருமே பசியால் அவதிப்படக்கூடாது எனும் இலக்கை எட்டுவது கடினம் என்று ஐ.நா சபை அச்சம் தெரிவித்தது.

பசியையும், உணவுப் பொருள் மீதான கட்டுப்பாட்டையும் ஆயுதமாகப் பயன்படுத்தி பயங்கரவாதக் குழுக்கள் சமூகங்களைப் பிளவுபடுத்துவதாக அறிக்கை எச்சரித்தது.

உணவுப் பாதுகாப்பு இல்லாமல், ஒருபோதும் அமைதியும் நிலைத்தன்மையும் சாத்தியப்படாது என்று அறிக்கை குறிப்பிட்டது.

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை