அகில இலங்கை வை.எம்.எம்.ஏயின் 69வது வருடாந்த மாநாடு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏயின் 69வது வருடாந்த மாநாடு இன்று (28) கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர்கூடத்தில் அமைப்பின் தேசியத் தலைவர் எம்.என்.எம்.நௌபீல் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான பங்களாதேஷ்நாட்டின் உயர் ஸ்தானிகர் எம்.ரயிஸ் ஹமீதுல்லாவும் கௌரவ அதிதியாக கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் செயலாளர் மகேந்திர ஜெயசேகரவும், விஷேட அதிதியாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அப்துல் லத்தீப், இளம் மாதர் அமைப்பினர் உட்பட பல புத்திஜீவிகளும், கல்விமான்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அப்துல் லத்தீப் மற்றும் முன்னாள் சவுதி அரேபியாவின் தூதுவர் ஜாவிட் யூசுப் ஆகியோருக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி நினைவுச்சினத்தை பிரதம அதிதி உள்ளிட்டவர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாவட்ட அடிப்படையில் மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்றிய மாவட்டமட்டத் தலைவர்களுக்கு நினைவுச் சின்னங்களும்வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அப்துல் லத்தீப் வை.எம்.எம்.ஏ க்கு விஷேட நினைவுச் சின்னம் ஒன்றினையும்வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

Sun, 07/28/2019 - 15:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை