நைஜீரியாவில் பொக்கோ ஹராம் தாக்குதல்: 65 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் வடகிழக்கு மாகாணமாக போர்னோவில் இறுதிச் சடங்கின்போது பொக்கோ ஹராம் குழுவென சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் உயிரிழப்பு பற்றி முன்னர் வெளியான செய்தியை விடவும் இது மூன்று மடங்கு அதிகமாகும்.

இந்த துப்பாக்கிச் சூடு இடப்பெற்று அடுத்த தினமான கடந்த ஞாயிறன்று மேலும் பல டஜன் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. “இதில் 65 பேர் கொல்லப்பட்டு 10 பேர் காயமடைந்துள்ளனர்” என்று உள்ளுர் அரச தலைவர் முஹமது புலாமா குறிப்பிட்டுள்ளார்.

பொக்கோ ஹராம் போராளிகள் இரண்டு வாரத்திற்கு முன்னர் கிராமத்திற்கு வந்தபோது அவர்களில் 11 பேரை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாக இந்த தாக்குதல் இருபதாக புலாமா குறிப்பிட்டுள்ளார்.

“கிராமத்தினரின் பதில் தாக்குதலில் 11 ஆயுததாரிகள் கொல்லப்பட்டிருந்ததோடு அவர்களிடம் இருந்து 10 ஏ.கே. 47 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டிருந்தது” என்று அவர் தெரிவித்தார்.

பொகோ ஹராமுக்கு எதிராக போராட்டக் குழுவின் தலைவரான பனு பக்கர் முஸ்தபா இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதி செய்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது சூடு நடத்தியதில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும் பின்னர் அந்த தாக்குதலை முறியடிக்க முயன்றபோது மேலும் 42 பேர் பலியானதாகவும் முஸ்தபா குறிப்பிட்டார். ஒரு தசாப்த காலமாக வடகிழக்கு நைஜீரியாவில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொக்கோ ஹராம் குழுவின் வன்முறைகளில் 27,000 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதோடு இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹராம் கூறிவருகிறது.

Tue, 07/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை