கிரேக்கத்தில் கடும் புயல்: 6 சுற்றுலா பயணிகள் பலி

வடக்கு கிரேக்கத்தை தாக்கிய சக்திவாய்ந்த புயலால் மூன்று சுற்றுலா பயணிகள் உயிரிழந்திருப்பதோடு மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

டெசலொனிக்கி நகருக்கு அருகில் பலத்த காற்று வீசியதோடு கடும் மழை மற்றும் அலங்கட்டி மழை பொழிந்தது. தான் பயணித்த வாகனம் வீசி எறியப்பட்டதில் செக் நாட்டு தம்பதியர் கொல்லப்பட்டனர். இரு ருமேனியர் மற்றும் இரு ரஷ்யர்களும் பலியாகியுள்ளனர்.

அவசர நிலை பிரகடனப்படுத்தி இருப்பதோடு 100க்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இது முன்னெப்போது ஏற்படாத நிலை என்று வடக்கு கிரேக்கத்தின் சிவில் பாதுகாப்பு தலைவர் கரலம்போஸ் ஸ்டரியாடிஸ் விபரித்துள்ளார்.

கிரேக்கத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக 37 செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை இருந்தபோதே இந்த புயல் வீசியுள்ளது.

புயலால் மரங்கள், கார்கள் தூக்கி வீசப்பட்டிருப்பதும் கட்டடங்கள் சோதமாகி இருப்பதும் சமூக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் காண்பிக்கின்றன.

Fri, 07/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை