50 ரூபா கொடுப்பனவு அடுத்தமாத சம்பளத்துடன் வழங்க நடவடிக்கை

அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க ஏற்பாடு

தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவு அடுத்தமாத சம்பளத்தில் பெற்றுக் கொடுக்கப்படுமென மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த அமைச்சரவையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்தமாத சம்பளத்தில் 50 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

அமைச்சர் நவீன் திசாநாயக்க தமது அமைச்சினூடாக 50 ரூபா கொடுப்பனவைப் பெற்றுத் தருவதாக ஏற்கனவே உறுதியளித்திருந்த போதும் கடைசி நேரத்தில் ஏமாற்றி விட்டார். அவரும் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்றே பதவிக்கு வந்தவர் என்பதை மறந்து செயற்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், எவ்வாறாயினும் அடுத்த சம்பளத்தில் 50 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் திகாம்பரம் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுக் காலை இடம் பெற்ற மலையக இளைஞர் யுவதிகள் 75 பேருக்கு பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் உத்தியோகத்தர், அழைப்பாளர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் திகாம்பரம் தெரிவித்ததாவது,

மனோவும் நானும் 50 ரூபா கொடுப்பனவை கட்டாயம் வாங்கிக் கொடுப்போம் மக்களை ஏமாற்றி குளிர்காய சிலர் முயற்சிக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் 50 ரூபா சம்பள உயர்வு பிரச்சினையில் சிலர் மக்களை ஏமாற்றி அதில் குளிர்காய நினைக்கின்றனர். "50 ரூபா சம்பள பிரச்சினையில் காட்டிக்கொடுத்த சிலர், மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். 50 ரூபா தொடர்பில் குறைகூறும் சில சக்திகள் 20 ரூபாவை மாத்திரம் வாங்கிக் கொடுத்துவிட்டு மக்கள் மத்தியில் பொய் கூறித் திரிகின்றனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை