டிரம்பின் இனவாத தாக்குதலுக்கு உள்ளான 4 பெண்களும் பதிலடி

‘டிரம்பின் துண்டிலில் சிக்க வேண்டாம்’

அமெரிக்க பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள பெண் உறுப்பினர்கள் நால்வர் குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்தை அந்த நால்வரும் நிராகரித்துள்ளனர்.

அலெக்சாண்டிரியா ஒகாஸ்சியோ கோர்டெஸ், இல்ஹான் ஒமார், ஐயானா பிரெஸ்லி, ரஷிடா தாலிப் ஆகிய நால்வரும், டிரம்பின் தூண்டிலில் சீக்கிவிடாதீர்கள் என்று அமெரிக்க மக்களைக் கேட்டுக்கொண்டனர்.

ஜனாதிபதி டிரம்ப் தமது நிர்வாகத்தின் சீர்கேடுகள் மீதிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இப்படிப்பட்ட கருத்துகளை வெளியிடுவதாக அந்தப் பெண்கள் குறைகூறினர்.

ஆகவே, அமெரிக்கர்கள் அரசாங்கக் கொள்கைகள் மீது கவனம் செலுத்தவேண்டுமே தவிர ஜனாதிபதியின் வார்த்தைகள் மீது அல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் குறிப்பிட்டனர்.

முன்னதாக அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு போன்ற அமெரிக்காவின் எதிரிகளை அந்தப் பெண்கள் விரும்புவதாகத் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

“அமெரிக்கா பிடிக்கவில்லை என்றால் வெளியேறிவிடுங்கள்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் யாரையும் பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை.

அவர்கள் அனைவரும் அமெரிக்கக் குடிமக்கள் என்றபோதும் அவர்கள் யாருமே அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்லர்.

ஜனாதிபதி டிரம்ப் தமது கருத்துகளைத் தற்காத்துப் பேசியுள்ளார். தமது கருத்து இனவாதம் மிக்கது என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை