4 புலிகள் தாக்கி சர்க்கஸ் பயிற்றுவிப்பாளர் உயிரிழப்பு

இத்தாலியின் தென்பகுதியில் ஓர்பெய் சர்க்கஸ் பயிற்றுவிப்பாளர் ஒருவரைப் பயிற்சியின் போது 4 புலிகள் தாக்கிக் கொன்றுள்ளன.

நிகழ்ச்சிக்கான ஒத்திகையின்போது அந்தத் துயரச் சம்பவம் நேர்ந்தது. எட்டோர் வெபர் எனும் 61 வயதுப் பயிற்றுவிப்பாளரை முதலில் ஒரு புலி தாக்கியதாகவும் அதைத் தொடர்ந்து கூண்டில் இருந்த மூன்று புலிகள் அவரைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவரது சடலத்தைக் கொண்டு புலிகள் விளையாடியதாகவும், பலத்த காயங்களால் எட்டோர் உயிரிழந்ததாகவும் உதவி மருத்துவர்கள் கூறினர்.

இத்தாலியில் மிகப் பிரபலமான சர்க்கஸ் பயிற்றுவிப்பாளர்களில் எட்டோரும் ஒருவராவர்.

தற்போது அந்தப் புலிகள் சர்க்கஸில் இருந்து விலங்குத் தோட்டத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்கிறது.

காட்டு விலங்குகளை சர்க்கஸிற்கு பயன்படுத்துவதற்கு 40 நாடுகளில் பகுதி அளவில் தடை இருப்பதோடு இதில் 20 ஐரோப்பிய நாடுகளும் உள்ளடங்கும்.

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை