முல்லைத்தீவில் 3 மீனவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் மூவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, குருகந்த மற்றும் கொக்கிளாய் ஆகிய பகுதிகளில் குறித்த மீனவர்கள் நேற்று (30) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குருகந்த மற்றும் கொக்கிளாய் கடற்பகுதிகளில் ரோந்து நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அனுமதிக்கப்படாத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த மீனவர்கள் மூவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த மீனவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு,  அவர்களிடமிருந்து 02 டிங்கி படகுகள், 02 இஞ்ஜின்கள், 540 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலை, 255 கிலோகிராம் மீன் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.  

புல்மோட்டை மற்றும் கொக்கிளாயை சேர்ந்த 29, 41, 47 வயதான மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களுடன், கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள் முல்லைத்தீவு மீன்பிடித் திணைக்கள பிரதி பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைக்காக  ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

Wed, 07/31/2019 - 09:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை