பிரேவியன் சமர் கிரிக்கெட் சுற்றுப் போட்டி; 32 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்பு

சாய்ந்தமருதின் பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு கிழக்கு மாகாண ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 9 பிரதேசங்களைச் சேர்ந்த 32 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்கும் 20 இற்கு 20 மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டிக்கான கழகங்களை அறிமுகம் செய்து வைத்தல் மற்றும் அணிகளை நிரலிடுதல் நிகழ்வு கழகத்தின் தலைவர் எம்.ஐ.எம். அஸ்ஹர் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை ( 22 ) இடம்பெற்றது.

32 விளையாட்டுக் கழகங்களும் 4 கழகங்களை உள்ளடக்கியதாக 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று லீக் அடிப்படையில் சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இவ்வார இறுதியில் இடம்பெறவுள்ளது.

குழு – ஏ யில் கல்முனை அஸ் ஸம்ஸ் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம், மருதமுனை பிரைட் பியுச்சர் விளையாட்டுக் கழகமும், குழு – பி யில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது ஒஸ்மானியன் விளையாட்டுக் கழகம், நிந்தவூர் லகான்ஸ் விளையாட்டுக் கழகம், நிந்தவூர் கென்ட் விளையாட்டுக் கழகமும், குழு – சியில் கல்முனை ஹரிகன்ஸ் விளையாட்டுக் கழகம், கல்முனை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம், கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது பீமா விளையாட்டுக் கழகமும் குழு – டி யில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம், கல்முனை லெஜன்ட் விளையாட்டுக் கழகம், கல்முனை ஜிம்ஹானா விளையாட்டுக் கழகம், யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம், காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகமும், குழு – ஈ யில் காரைதீவு விளையாட்டுக் கழகம், காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகம், கிண்ணியா கிண்ணியன்ஸ் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டுக் கழகமும், குழு – எப் இல் கல்முனை இஸ்லாமாபாத் விளையாட்டுக் கழகம், நிந்தவுர் இம்ரான் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம், கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகமும், குழு – ஜி யில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் , மூதுார் யங் லயன்ஸ் விளையாட்டுக் கழகம், கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம், கல்முனை டொப்பாஸஸ் விளையாட்டுக் கழகமும் குழு – எச் இல் சம்மாந்துறை றியல் மெற்றிக்ஸ் விளையாட்டுக் கழகம், கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகம், சம்மாந்துறை விளையாட்டுக் கழகம், சம்மாந்துறை ஈஸ்ட்டன் ரோயல் விளையாட்டுக் கழகமும் பங்கேற்கவுள்ளன.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

Fri, 07/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை