நீரோடையில் விழுந்த மாணவியின் சடலம் 300 அடி தூரத்தில் மீட்பு

அக்கரப்பத்தனை, டொரிங்டன் தோட்டத்தில் நேற்று முன்தினம் (18) நீரோடையில் விழுந்து அடித்துச் செல்லப்பட்ட இரண்டாவது மாணவியின் சடலம் நேற்று (19) காலை 9.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இம் மாணவியை தேடும் நடவடிக்கையில் அக்கரப்பத்தனை பொலிஸார், அதிரடிப்படையினர் மற்றும் பொது மக்கள் (19) நேற்று காலை முதல் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மாணவியின் சடலம் கொத்மலை நீர்தேகத்திற்கு நீரேந்திச் செல்லும் டொரிங்டன் தோட்ட கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 300 அடி தூரத்திலேயே மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இம் மாணவிகள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என்பதுடன், உயிரிழந்த மதியழகன் லக்ஷ்மி என்ற மாணவியின் சடலம் நேற்று முன்தினம்(18) மாலை மீட்கப்பட்டு, அக்கர்ப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய மாணவி மதியழகன் சங்கீதா (19) காலை மீட்கப்பட்டு அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரு மாணவிகளின் சடலத்தையும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹற்றன் சுழற்சி, நோட்டன் பிரிஜ் நிருபர்கள்

 

 

Sat, 07/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை