சீன உள்நாட்டு உற்பத்தி 27 ஆண்டுகளில் வீழ்ச்சி

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.2 வீதமாக குறைந்துள்ளது.

நடப்பாண்டின் முந்தைய காலாண்டில் 6.4 வீதமாக இருந்த சீனாவின் உள்நாட்டு உற்பத்தி, இரண்டாவது காலாண்டில் 6.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. சீனாவின் மீது அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போரால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேவை குறைந்தது உள்நாட்டு உற்பத்தி சரிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மேலும் குறைந்து வருகிறது. இதனால் பொருளாதார மந்தம் இன்னும் நீடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிய நிறுவனங்களை சரிவிலிருந்து மீட்க பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகித கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு செய்துள்ளதாக சீன பிரதமர் லீ கெக்கியாங்க் தெரிவித்துள்ளார்.

Tue, 07/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை