ஆபிரிக்காவுக்கு வெளியில் 210,000 ஆண்டு பழமையான மனித எச்சம் கண்டுபிடிப்பு

ஆபிரிக்காவுக்கு வெளியில் மிகப் பழமையான மனித எச்சங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கிரேக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மண்டையோடு ஒன்று 210,000 ஆண்டுகள் பழமையானதாகும். அந்தக் காலத்தில் ஐரோப்பா நியாண்டர்தோல் மக்களால் நிரம்பி இருந்தது.

ஆபிரிக்காவிலிருந்து மனிதர்கள் வெளியிடங்களில் குடியேறினார்கள் என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது. ஆனால், அந்த தடயங்கள் எதுவும் இப்போதைய மனிதர்களிடம் இல்லை.

இந்த கண்டுபிடிப்பு பற்றிய விபரம் ஜெர்னல் நேச்சர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

கிரேக்கத்தின் அபிடிமா குகையில் 1970களில் இரு குறிப்பிடத்தக்க எச்சங்களை ஆய்வாளர்கள் கண்டுபடித்திருந்தனர். அதில் ஒன்று அதிகம் சிதைந்திருந்ததோடு மற்றையது பூர்த்தி இன்றி காணப்பட்டது. எனினும் கணனி ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தியும் காலக்கணிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டும் அவைகள் பற்றி இரகசியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆபிரிக்காவில் இருந்து வெளியேறிய தற்கால மனிதர்களின் 60,000 ஆண்டுகளுக்கு முந்திய தடயங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த தற்கால மனிதன் யுரேசியாவில் பரவியதை அடுத்து அங்கு இருந்த நியாண்டர்தோல் மற்றும் டெனிசோவான்ஸ் போன்ற ஆதிகால மனித இனங்கள் காணாமல்போயுள்ளன.

எனினும் ஆபிரிக்காவுக்கு வெளியில் தற்கால மனிதனின் (ஹோமோ சேபியன்கள்) முதல் புலம்பெயர்வாக இது இருக்கவில்லை.

1990களில் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமோ சேபியன்களின் எச்சங்கள் 90,000 மற்றும் 125,000 ஆண்டுகளுக்கு முந்தியதாகும். இதன்மூலம் எமது இனம் முன்னர் அறியப்பட்டதை விடவும் முன்கூட்டியே ஆபிரிக்காவில் இருந்து வெளியேறி இருப்பது உறுதியாகிறது.

Fri, 07/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை