18,000 பேரை வேலை நீக்கம் செய்ய டியுட்சே வங்கி முடிவு

ஜெர்மானி முதலீட்டு வங்கியான டியுட்சே வங்கி சர்வதேச அளவில் 18,000 பேரை வேலையில் இருந்து நீக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டியுட்சே வங்கியின் மறுசீரமைப்பு திட்டம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக 8.31 பில்லியன் டொலர் செலவிடப்படும் என்று அந்த வங்கி தெரிவித்தது.

ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை வேலைகள் குறைக்கப்படவுள்ளன என்ற தகவலை அந்த வங்கி வெளியிடவில்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிக அளவில் வேலைகள் குறைக்கப்படும் எனக் கருதப்படுகிறது.

முதற்கட்டமாக சிட்னியிலும் ஹொங்கொங்கிலும் வேலைக்குறைப்பு செயல்படுத்தப்படும் என்று டியுட்சே வங்கி தெரிவித்தது.

கடந்த சில ஆண்டுகளாக ஒழுங்குமுறை அபராதம் மற்றும் அபராதம், பலவீனமான இலாபம், அதிக செலவினங்கள் மற்றும் பங்கு விலை வீழ்ச்சியுடன் இந்த வங்கி போராடி வருகிறது.

குறிப்பாக கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் 341 மில்லியன் யூரோக்களை நேர்மறையான வருவாயை பதிவு செய்தது. எனினும் இந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டியன் பொறுப்பேற்ற பின் இந்த விரைவான மறுசீரமைப்புக்கு உறுதியளித்துள்ளார்.

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை