ரயில்கள் நேருக்கு நேர் மோதி பாகிஸ்தானில் 14 பேர் பலி

பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பயணிகள் 14 பேர் உயிரிழந்தனர்.

பலோசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அக்பர் எக்ஸ்பிரஸ் ரயில் லாகூர் நோக்கி சென்றது. இந்த ரயிலானது சாதிக்காபாத்தில் உள்ள வால்ஹர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, நேராக செல்வதற்கு பதில் தடம் மாறி அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்தக் கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 60க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படத்தப்பட்டதோடு ரயில் சிதைவுகளுக்குள் சிக்கியிருப்போரை மீட்பதற்கு ஊழியர்கள் போராடினர்.

காயமுற்றவர்கள் அருகில் இருக்கும் அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இம்ரான்கான், ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Fri, 07/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை