அம்பாறையில் கடும் வரட்சி; 11,556 குடும்பங்கள் பாதிப்பு

சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் 36 அடியாக குறைவு

22 பவுசர்கள் மூலம் நீர்விநியோகம்

(அட்டளைச்சேனை குறூப் நிருபர்)

அம்பாறை மாவட்டத்தில் முன்னர் ஒருபோதுமில்லாதவாறு வரட்சி நிலவிவருகின்றது. ஆறுகள், குளங்கள் நீர்த்தேக்கங்கள் மாத்திரமின்றி குடிநீர்க்கிணறுகள் கூட வற்றியுள்ளன. சேனநாயக சமுத்திரம் 110 அடி மட்டத்திலிருந்து 36 அடியாக குறைந்துள்ளது.

770,000 ஏக்கர அடி நீரைக் கொள்ளளவாக கொண்ட சேனநாயக குளம் தற்போது 36,000 ஏக்கர் அடி நீரை மாத்திரமே கொண்டுள்ளது. இது ஒருபோதுமில்லாத வரட்சியாகுமென நீர்ப்பாசன இலாகா கூறுகின்றது.

மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வறட்சியால் பொது மக்கள் மாத்திரமன்றி, விவசாயிகள், கால்நடை பண்ணையாளர்கள், உப உணவுப்பயிர்ச் செய்கையாளர்கள் என பலதரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தின் 12 பிரதேச செயலாளர்கள் பிரிவைச் சேர்ந்த 11,556 குடும்பங்களைச் சேர்ந்த 70,012 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகா மைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எ.சீ. ரியாஸ் தெரிவித்தார்.

குடிநீர்ப் பிரச்சினை நிலவும் திருக்கோவில், தம்பிலுவில், பொத்துவில், மஹா ஓயா, பதியதளாவ போன்ற பிரதேசங்களில் குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்து வைக்கும்பொருட்டு 22 தண்ணீர் பவுசர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தேவைப்படுமிடத்து பவுசர்கள் வழங்கப்படுமெனவும் அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.

குடிநீரைத் தேடி கிராம மக்கள் மைல் கணக்கில் நடந்து செல்ல வேன்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பிரதேச செயலாளர்கள் நிலைமைகளை அவதானிக்குமாறும் குடி நீர் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்குமாறும் தனக்கு தகவல்களை தந்து உதவுமாறும் அரச அதிபர் வேண்டியுள்ளார்.

இதேவேளை வரட்சியால் வேளாண்மை செயகைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. நெற்செய்கை பண்ணப்பட்டுள்ள 47,300 ஹெக்​டேயரில் இதுவரை கிடைத்த தகவல்களின்படி 1661 ஹெகடேயரில் செய்கை பண்ணப்பட்ட விவசாயம் நீரின்றி மடிந்துள்ளதகவும் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் எம்.எப்.ஏ. சமீர் தெரிவித்தார்.

விவசாய உத்தியோகஸ்தர்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நெற்செய்கை தொடர்பான விபரங்களை திரட்டுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Thu, 07/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக