பொதுஜன பெரமுன 10 அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாளை 26ம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 அரசியல் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அவர் இதனை பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள இலங்கை பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து ஒருங்கிணைந்த எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கு மேலதிகமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யாத பதிவு செய்யப்பட்ட பதினெட்டு கட்சிகள் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள கலந்துரையாடி வருகின்றன. ஏனைய கட்சிகளும் எதிர்வரும் காலங்களில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைந்துகொள்ளுமென தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் யாரென பொதுஜன பெரமுனவின் சம்மேளனத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்பார். அன்று பெயர் குறிப்பிடப்படும் ஜனாதிபதி அபேட்சகர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் ஆகஸ்ட் 18ம் திகதி வரை மகாநாயக்க தேரர்கள், கர்தினால் ஆண்டகை மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள் சந்தித்து ஆசிர்வாதம் பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர், டலஸ் அழகப்பெரும, மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரும் ஊடகங்களுக்கு தமது கருத்துகளை தெரிவித்தார்.

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை