விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கிற்கு அடிக்கல்

உள்நாட்டு உணவுகளை உட்கொண்டு எமது உடம்புக்கு கிடைக்கும் பலத்தினைக் கூறி முடிக்க முடியாது. நாம் புதுமையான பலத்தைக் கொண்டவர்கள். கிராமங்களுக்கு விளையாட்டுத் துறையினைக் கொண்டு வருவது பெரிய விடயம் என ஒலிம்பிக் பதக்கம் வென்ற திருமதி சுசந்திகா ஜயசிங்க புத்தளம் கருவலகஸ்வெவவில் கூறினார். புத்தளம் கருவலகஸ்வெவ சாலிய மாதிரி மகா வித்தியாலயத்தின் 40 வருட நிறைவையொட்டி புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வின் போது அங்கு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் வேண்டுகோளுக்கு இணங்க விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தினால் சுமார் 100 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவினால் நடப்பட்டதுடன் அந்நிகழ்விலும் சுசந்திகா ஜயசிங்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்தும் பேசிய சுசந்திகா மேலும் கூறியதாவது,

நாம் பலவித குறைபாடுகளுக்கு மத்தியில் உலகை வென்று காட்டியிருக்கின்றோம். காமன்வெல்த் போட்டிகளிலும் நாம் வென்றிருக்கின்றோம்.

அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் எந்தளவு தூரம் விளையாட்டுக்காகப் பணியாற்றுகின்றார்கள்? அவர்களிடமிருந்து பயன் பெறப்படுகின்றதா? விளைாட்டில் திறமைகாட்டிய பழைய திறமையான அதிகாரிகள் இருக்கின்றார்கள். அவ்வாறான திறமையான அதிகாரிகளுக்குத் தகுதியான பெறுமதியை வழங்கினால்தான் அவர்கள் இன்னும் இறங்கி விளையாட்டுத் துறையில் செயற்பட நினைப்பார்கள் என்றார்.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற திருமதி ஸ்ரீயாணி குலவங்ச, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் தம்மிக நாமல் முத்துகல மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் ஜனக துஷார பாலசூரிய ஆகியோர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது விளையாட்டுப் பயிற்சி மையயம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுஅதற்கு சுமார் பதினொரு இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

(புத்தளம் விஷேட நிருபர்)

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை